இந்திய ஆஸி., பயிற்சி ஆட்டம்…!

இந்தியா-ஆஸி., அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஸ்டீவன் சுமித் தலைமையில் 5 ஒருநாள் மற்றும் டி-2௦ மூன்று போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று ஆஸி.,அணி கேட்டுக்கொண்டது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆஸி., அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 5௦ ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 347 ரன்கள் எடுத்தது.
மார்கஸ் ஸ்டோயின்ஸ் 76, டிராவிஸ் கெட் 65, டேவிட் வார்னர் 64 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.


ஆஸ்திரேலியா அணி 1௦3 ரன்கள் வித்தியாசத்தில் பயிற்சி ஆட்டத்தில் வென்றது.

About the author

Related

JOIN THE DISCUSSION