விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு ‘படம்’ சொல்லும் ‘பாடம்’..!

0
0

தற்போது வலை தளங்களில் இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திராவில் எடுக்கப்பட்ட அந்த படம் கையெடுத்து கும்பிடும் அந்த போலீஸ் அதிகாரியை பார்த்தால் நம்ம ஊரு நடிகர் வினு சக்கரவர்த்தி போல இருக்கிறார்.

அவரது பவ்யமான கும்பிடு இனிமேல் இதைப் போன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று மன்றாடுவது போல உள்ளது. அந்த படத்தை பார்த்த பின்னர் பலர் விதிகளை பின்பற்ற தொடங்கிவிட்டார்களாம்.

அந்த போலீஸ் அதிகாரி பெயர் சுபகுமார். அனந்தபூர் பகுதி, மடகாசிரா வட்டத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். பல போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியவர்.

அந்த பைக்கில் அவருடன் சேர்த்து 5பேர் பயணம் செய்கின்றனர். அந்த பைக்கை ஓட்டும் ஹனுமந்தராயுடுவும் இன்ஸ்பெக்டர் நடத்திய போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்சிகளில் கலந்து கொண்டவர்.

அதனால் நொந்து போன இன்ஸ்பெக்டர் சுபகுமார், ‘நீங்கள் எல்லாம் இப்படி செய்தால் நான் இந்த வேலையையே விட்டுட்டு போய்டறேன்.

அப்புறம் நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் பயணம் செய்யுங்கள்’ என்று நிர்கதியாக, இத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் ஏமாந்து விட்டோமோ என்று கையெடுத்து கும்பிட்டு நிற்கிறார்.

அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here