விராட்கோலிக்கு ஹாட்ரிக் பரிசு! ஐசிசி அறிவிப்பு!!

0
3

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால்
சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் பரிசும் கோலிக்கு கிடைக்கவுள்ளது.

செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,203 ரன்களை (77.80 சராசரி) குவித்துள்ளார். அதில் 8 சதங்கள்.                                                                              ஒரு நாள் போட்டிகளில் இவர் 1,818 ரன்களை குவித்துள்ளார் (82.63 சராசரி). இதில் 7 சதங்கள்.
டி20 போட்டிகளில் 299 ரன்களை எடுத்துள்ளார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியதும் விராட் கோலி தலைமையில் பெற்றது.

இந்த விருதுகளோடு, ஐசிசி-ன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோலி, “ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை பெறுவது மிகப்பெரிய விஷயம். முதன்முறையாக அக்கோப்பையை வாங்கவுள்ளேன்.


மேலும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2012ல் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றேன்
கடந்த ஆண்டு இவ்விருதை அஸ்வின் ரவிச்சந்திரன் பெற்றார். இப்போது என் முறை. தொடர்ந்து இந்திய வீரர்கள் விருதுபெறுவது மேலும் சிறப்பானதாக உள்ளது. இவ்வாறு கோலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here