குரோர்பதி போட்டியில் ரூ.12.5லட்சம் பரிசுபெற்ற உதவி கலெக்டர்!

குரோர்பதி நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முதன்முறையாக பங்கேற்று ரூ.12.5லட்சம் பரிசுவென்றுள்ளார்.

சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி என்ற குவிஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இப்போட்டியில் முதன்முறையாக ஐஏஎஸ் அதிகாரி வினய்கோயல் பங்கேற்றார்.

இவர் திருச்சூர் உதவி கலெக்டராக உள்ளார்.

குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்று 13வது கேள்வியில் இவர் வெளியேறினார்.

இவரிடம்  ஜிகா வைரசை பரப்பும் கொசு எது, ஸ்மார்ட்போனில் பயன்படும் கண்ணாடியின் பெயர் என்ன, பிகாரில் இருந்து திகார் வரை எழுதியது யார் என்று பலதுறைகளை சேர்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன.

 

ஹரியானாவை சேர்ந்த வினய்கோயல், எம்பிபிஎஸ் டாக்டர் பட்டம் பெற்றவர்.                                   கலெக்டராக வேண்டும் என்ற ஆசையில் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். 2014ல் 628வது இடம்பெற்ற இவர் மீண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுதி 79வது ரேங்கில் தேர்வானார்.

குரோர்பதி பரிசுத்தொகை ரூ.12.5லட்சத்தை குழந்தைகள் கல்விக்கு செலவிட உள்ளேன் என்று வினய்கோயல் தெரிவித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION