ஹைதரபாத் ஸ்டுடியோவில் தீ விபத்து! விடியோ!!

0
0

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் புகழ்பெற்ற அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ உள்ளது;.

ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் 7 ஏக்கர் பரப்பில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது.   இதில் நடிகர் நாகார்ஜூனாவும் பங்குதாரராக உள்ளார்.

இந்த ஸ்டுடியோவில் இரவு 7மணியளவில் திடீரென்று தீ பிடித்தது.  ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த செட்டின் ஒன்றில் தீ பிடித்ததாகவும், மின்கசிவால் விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.  இச்செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை நடிகர் நாகார்ஜூனா தடுத்து நிறுத்தினார்.  இது தனியார் சொத்து நீங்கள் ஏன் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று அவர் கேட்டார்.

ஸ்டுடியோ எப்போதும் பரபரப்பாக இயங்கும். சினிமா மட்டுமல்லாது ரிக்கார்டிங், விளம்பரப்படங்கள், சீரியல்கள் எடுக்கும் பணியும் அன்னபூர்ணாவில் நடைபெறும்.  ரூ.10கோடி மதிப்புள்ள 8 சினிமா செட்டுகள் தீயால் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here