ஐதராபாத் தொழில் மாநாடு..! ட்ரம்ப் மகள் பங்கேற்பு..!

0
0
Ivanka Trump applauds during the 2017 Trafficking in Persons Report release, Tuesday, June 27, 2017, at the State Department in Washington. (AP Photo/Jacquelyn Martin)

ஐதராபாத்தில் இந்திய – அமெரிக்க அரசுகள் சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா தலைமையில் அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து, அமெரிக்க தூதரக பொருளாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது :

இந்தியாவில், சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடத்த பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்தில், நவம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை, ‘பெண்களுக்கு முதலிடம்; அனைவருக்கும் ஐஸ்வர்யம்’ என்ற தலைப்பில், சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடக்க உள்ளது.


அமெரிக்க அரசும், ‘நிதி ஆயோக்’ அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்திய, அமெரிக்க உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டின் மூலம் மின்சாரம், அறிவியல், சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் வெற்றிகரமாக விளங்குவோர் மற்றும் தொழில்முனைவோர், அறிவுசார்ந்த தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ள உதவி புரியும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா சார்பில், டிரம்பின் ஆலோசகரும், மகளுமான இவாங்கா தலைமையில், அமெரிக்காவிலிருந்து 400 வெற்றிகரமான தொழில் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 400 தொழில்முனைவோரும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here