கடைசி போட்டியில் கால் தடுக்கி விழுந்த உசேன் போல்ட்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

0
0

லண்டனில் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மின்னல் வீரர்  என்றழைக்கப்படும் உசேன் போல்ட் கலந்து கொள்ளும் 400 மீட்டர் தடகளம் நடைபெற்றது.

இப்போட்டிதான் உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால்  மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூடியிருந்தனர்.

 

இந்நிலையில் போட்டியின் போது 4-வது வீரராக ஓடிய உசேன் போல்ட், தனது வழக்கமான பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து  தனக்கு முன் ஓடுபவரை முந்தி ஓட முயற்சி செய்தார்.

அப்போது உசேன் போல்ட், எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில்
வலது கால் மோதியதால் தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதைப் பார்த்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து  அவருக்கு வீல் சேர் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர்  நொண்டி,நொண்டி வலியுடன் நடந்தே சென்றார்.

 

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் உசேன் போல்ட் காயமடைந்தது ரசிகர்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Topics : Sports News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here