இறந்த மனைவியுடன் 6 மணி நேரம் காத்திருந்த கணவன்..! மணப்பாறையில் கொடுமை..!

0
2

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு,அயன்புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், கட்டிட தொழிலாளி. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவரக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சின்னப்பொண்ணு உயிரிழந்தார்.
சின்னப்பொண்ணுவின் உடலை சொந்த ஊரான அயன்புதுப்பட்டிக்கு எடுத்துச் செல்ல மணப்பாறை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் இலவச அமரர் ஊர்தி கேட்டனர். ஆனால், பலமணி நேரமாக காத்திருந்தும் அமரர் ஊர்தி வரவில்லை.


6 மணி நேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. வருகிறது,வருகிறது என்று சொன்னார்களே தவிர வரவில்லை. வேறு ஆம்புலன்சில் சின்னப்பொண்ணுவின் உடலை, கொண்டு செல்ல முயன்ற போது அதற்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதில் கோபமான சின்னப்போனுவின் கணவர்,அவரது மகன் மற்றும் உறவினர்கள் மருதுவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து 6 மணி நேரத்திற்கு பின்னர் அமரர் ஊர்தியை வர வைத்தனர்.

ஆனால், சின்னப்பொண்ணுவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றவோ அல்லது ஸ்டெரச்சரோ தந்து உதவி செய்யவில்லை. மனித நேயம் இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சின்னப்பொண்ணு உடலை கணவனும், மகனும் சேர்ந்து கையில் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றினர். இந்த தகவல் செய்தியாளர்களுக்கு தெரிய வந்ததும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர்.


அதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் தான் மனித நேயம் இன்றி இதைப் போன்ற சம்பவங்கள் நடந்தன. தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டனர் என்று செய்தியாளர்கள் புலம்பியபடி சென்றனர்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here