பொது இடங்களில் கட்டிப்பிடிப்பவர்களை ஜெயிலில் போடுங்கள்..! பா.ஜ.,எம்.பி., சர்ச்சை பேச்சு..!

0
0

ஆணும்,பெண்ணும் பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் அவர்களை சிறையில் தள்ளுங்கள் என்று பா.ஜ.எம்.பி..ஒருவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

உத்தரபிரதேசம், உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாக்ஷி மகாராஜ். அவர் நேற்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது, ‘பொது இடங்களில் ஆணும்,பெண்ணும் கட்டிப்பிடிக்கும் கலாசாரம் வளர்ந்ததால் தான் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன. பைக்கில் இளம் ஜோடிகள் கட்டிப்பிடித்துக்கொண்டு போவது, பார்க்,. பீச்சுகளில் வைத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வது, தியேட்டர்களில் முத்தம் கொடுப்பது போன்ற அநாகரீக செயல்களால் தான் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன.


முதலில் பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் ஜோடிகளை கைது செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். பின்னர் இந்த சமூகத்தில் கற்பழிப்பு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறைந்துவிடும் என்றார் அதிரடியாக.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here