வீட்டுக்கடன் வட்டி குறைகிறது!

0
0

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையால் வங்கிகள் வீடு, வாகன கடன்கள் அதிகளவில் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிதிக்கொள்கை தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் 2மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும்.

இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆளுநர், வங்கி வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி 6.25சதவீதமாக தொடர்கிறது.
அதேபோன்று ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் தரும் கடன் தொகைக்கான வட்டி 8சதவீதமாக தொடர்கிறது.

நுகர்வோர் விலைப்புள்ளி அடிப்படையில் பணவீக்கம் 4% என்ற ளவில் கட்டுக்குள் இருக்கவே வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

அரசுக்கடன் பத்திரங்களில் வங்கிகள் முதலீடு செய்யும் விகிதம் 20% என குறைக்கப்பட்டுள்ளது. இது 20.5%ஆக இருந்தது.

மேலும் அசையாச்சொத்துக்கள் குறிப்பாக வீடுகள் வாங்குவதற்கான வட்டி விகிதம் 0.4ல் இருந்து 0,25ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், வங்கிகள் கடனுதவி வழங்குவது தாராளமாகும்.
குறிப்பாக வீட்டுகடன், வாகன கடன் அதிகளவில் வழங்கப்படும் .
வீட்டுக்கடனுக்கான வட்டியும் ஒரு சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here