மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..!

0
53

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக வீடு கட்டும் குறைந்த வருமான பிரிவினருக்கு 2,10,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.

முதற்கட்டமாக மதுரையில், இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க, வார்டு வாரியாக சிறப்பு முகாம்களை நடத்த மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் குடிசை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

காலிமனை இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவரின் பேரில் பட்டா, பத்திரம் இருக்க வேண்டும். அவர் பெயரிலோ, அவரது குடும்பத்தினரின் பெயரிலோ வேறு எங்கும் வீடு, சொத்து இருக்கக் கூடாது.

மாத வருமானம் 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வீடு கட்ட, குறைந்த வட்டியில் வங்கிக்கடனுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். ஏற்கெனவே எடுத்த கணக்கெடுப்பில், பெயரைப் பதிவுசெய்யாதவர்கள் நகராட்சி, மாநகராட்சி அல்லது குடிசை மாற்று அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்று பதிவுசெய்து கொள்ளலாம்.

பரிசீலனையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால், உங்களுக்கு ரூ.2,10,000 மானியம் நான்கு தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

மேலும் விவரங்களை அறிவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தகுதியுடையவர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here