இந்தியாவில் நாய்களுக்காக ஒரு நட்சத்திர ஓட்டல்!

0
0

டெல்லி: இந்தியாவில் ஒவ்வொறு நகரங்களிலும் ஏரியாவுக்கு நூறு என்ற எண்ணிக்கையில் நாய்கள் வளர்ப்பவர்களின்றி தாங்களாக வளர்ந்துவருகின்றன.
இந்நிலையில், நாய்களுக்காக ஒரு ஓட்டல் இந்தியாவில் இயங்கிவருகிறது.

குருகிராம் நகரில் உள்ள க்ரிடிராட்டி ஓட்டல் நாய்களுக்கான சொகுசு ஓட்டல் என்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்த ஓட்டலில் தங்குவதற்கு ஒருநாளைக்கு ஒரு நாய்க்கு ரூ.5000 வசூலிக்கப்படுகிறது. நாயுடன் அதன் உரிமையாளர் ஒருவர் இலவசமாக! தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

காலை 7 மணிக்கே நாயை ஓட்டலுக்கு அழைத்துவந்துவிட வேண்டும். காலை உணவு, மசாஜ், குளியல், நாய்களுக்கு என்றே தயாரிக்கப்பட்ட பீர், அசைவ உணவு வகைகள் என்று நாய்களை சொர்க்கத்தை அனுபவிக்க வைக்கலாம் என்று கூறுகிறார் கிரிட்டிராட்டி ஓட்டல் நிர்வாகி.


இந்த ஓட்டலில் தங்கும் நாய்களுக்கு அளிப்பதற்காக பெல்ஜியத்தில் இருந்து பீர், ஆஸ்திரேலியாவில் இருந்து கேக், ஐரோப்பாவில் இருந்து நொறுக்குத்தீனி ஆகியவை இறக்குமதி செய்யப்படுகிறது.

நாயுடன் தங்குவதற்காக உரிமையாளர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் அறைகள் எங்கள் ஓட்டலில்உண்டு. நாய் ஓய்வெடுப்பதற்காக சிறப்புப்படுக்கையும், மனிதர்களுக்கான வழக்கமான கட்டிலும் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
வீட்டு விலங்குகள் தினமும் நமக்கு அன்பைதருகின்றன. அவற்றுக்கு நாம் அன்பை திருப்பிச்செலுத்த ஒருவழியாக இந்த ஓட்டலில் தங்குவதை மனிதர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here