ஹாலிவுட்டிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை..! நடிகைகள் புகார்..!

ஹாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். இவர் தயாரித்த பல படங்கள் ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. இவர் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறுகின்றனர்.


சமீபத்தில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை அவரது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ பெரும் பரபரப்புக்குள்ளானது. அந்த வீடியோ வெளியான பின்னர் அவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பல நடிகைகள் வாயை திறக்க தொடங்கினர்.

அந்த வரிசையில் ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலீனா ஜூலி ஆகியோரும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகைக்கு அவர்கள் அளித்த பேட்டியில்அதை தெரிவித்து உள்ளனர்.


பால்ட்ரோ கூறும்போது, ‘எனது 22 வயதில் வெய்ன்ஸ்டீன் படத்துக்கு தேர்வானேன். படப்பிடிப்பே தொடங்கவில்லை. என்னை அவர் ஹோட்டல் அறைக்கு அழைத்தார். பொதுவாக எல்லா நடிகைகளையும் அப்படித்தான் அறைக்கு அழைப்பார்.

உடனே நான்எனது காதலரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறினேன். அவர் வெயின்ஸ்டெயினை கடிந்துகொண்டார். உடனே,
இதை, வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று என்னை தனியாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பிரபல நடிகை, ஏஞ்சலீனா ஜூலி கூறுகையில் ‘எனது இளமை காலத்தில் ஹார்வே வெயின்ஸ்டெயின் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டார். அதற்கு பின் நான் அவருடன் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற நடிகைகளையும் எச்சரித்துள்ளேன். அவரது செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இந்த குற்றசாட்டுகள் வெளியான பிறகு ஹார்வி வெய்ன்ஸ்டீன், தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். வரும் அவரது கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பல குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார். ஹாலிவுட்டில் சர்ச்சைக்குரிய மனிதராக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பேசப்படுகிறார்.

Related Topics : Cinema News

 

About the author

Related

JOIN THE DISCUSSION