நடுவானில் பரபரப்பு! விமானத்தில் மிரட்டல் கடிதம்!!

0
0

டெல்லி: மும்பையில் இருந்து டெல்லி வந்த தனியார் விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லிக்கு அதிகாலை 3மணிக்குவந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 115பேர் இருந்தனர்.
விமானப்பணிப்பெண் கழிவறைக்கு சென்றபோது கசங்கி கிடந்த ஒரு கடிதத்தை பார்த்தார்.
அதில் “இந்த விமானம் கடத்தப்படும். பிறகு இந்த விமானத்தை குண்டு வைத்து தகர்ப்போம்“ என்று மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக அந்த பணிப்பெண் இதுபற்றி விமான பைலட்டுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பைலட், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு “விமானத்துக்குள் வெடிப்பொருட்களுடன் கடத்தல்காரர்கள் உள்ளனர்”என்று கூறினார்.

விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானத்தை உடனே தரை இறக்கும்படி கூறினார்கள். 3.45 மணிக்கு அந்த விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

போலீசார் பயணிகள், அவர்களது பொருட்கள், விமானம் முழுவதும் சோதித்தனர். எதுவும் இல்லை என்று தெரிந்ததும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானம் மீண்டும் பறந்தது.
அக்கடிதத்தை எழுதியது யார் என்று விமானப்பாதுகாப்பு படையினர் தீவிர விசாரித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here