நவம்பர் 17-க்கு முன் உள்ளாட்சி தேர்தல்..! உயர்நீதி மன்றம் உத்தரவு..!

0
0

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்  நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 11 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த வருடம் அக்டோபர் மாதமே உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க தொடர்ந்த வழக்கால் தேர்தல் தள்ளிப்போனது.

அதன் பிறகு, தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில், ‘வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பை வருகின்ற 18-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்’ என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Topics : Tamilnadu News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here