விமான நிலையத்தின் எக்ஸ்ரே மெஷினை ஏமாற்றி பணம் கடத்தல்!

0
2

புதுடெல்லி: விமான நிலையத்தின் எக்ஸ்ரே மெஷின்களில் மாட்டிக்கொள்ளாமல் ஹவாலா பணம் கடத்திய விமானபணிப்பெண் மாட்டிக்கொண்டார்.


டெல்லியில் இருந்து ஹாங்காங் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக வேலைபார்த்துவந்தவர் தேவ்ஷி குல்ஷிரேஸ்டா(24). இவரது கணவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
தேவ்ஷி கடந்த சில மாதங்களாக பல லட்சங்கள் சம்பாதித்து கணவரது வங்கிக்கணக்கில் செலுத்திவந்தார். இந்நிலையில் அவர் கைதாகி உள்ளார்.


டெல்லியில் இருந்து ஹவாலா பணத்தை அலுமினிய பேப்பர்களில் மறைத்து அவை சாக்லெட்டுகள் என்று கூறி கடத்தியுள்ளார் அப்பெண்.
அலுமினியத்தாள் சுற்றப்பட்ட பொருளை எக்ஸ்ரே மிஷின் கருப்புநிறத்தில் காட்டுவது வழக்கம்.
அவ்வாறு காட்டினால், அந்த உடைமையை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு பின் எடுத்துச்செல்ல அனுமதிப்பது வழக்கம்.

அதேபோன்று தேவ்ஷியின் கைப்பையை சோதனையிட அவர் மாட்டிக்கொண்டார்.
அவருக்கு ஹவாலா பணம் கொடுத்து உதவிய ஏஜெண்டும் மாட்டிக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here