கடைசி டெஸ்டில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் மழை..! அதிரடி விடியோ!!

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமார வீசிய ஓவரில், முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய பாண்டியா, அடுத்த மூன்று பந்துகளையும் சிக்சர் பறக்கவிட்டார். கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

 

 

இதன்மூலம் ஒரு ஓவரில் 26 ரன்களை குவித்த பாண்டியா, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

இதற்கு முன்னர், கபில்தேவ் ஒரு ஓவரில் 24 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது, பாண்டியா கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் பாண்டியா, இலங்கைக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.

 

 

சிறப்பாக விளையாடிய பாண்டியா 7 சிக்சர், 8 பவுண்டரி என 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி முதல் இன்னிங்கில் 487 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. தற்போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION