மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கண்ணீர் கதை!

0
0

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்கள் தினம்தினம் கொடுமை, அவமானத்தால் பாதிக்கப்பட்டுவந்தனர்.

உதய்ப்பூர் பய்தி கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மாராம். இவரது மகன் ஜூவராம்(11).

இச்சிறுவன் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் உள்ளான்.

ஹர்மா ராம் தினம் வேலைக்கு செல்லும் போது வீட்டின் அருகில் உள்ள மரத்தில்  ஜீவராமை கட்டிவிட்டு செல்கிறார்.

அச்சிறுவன் எங்கும் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காக அவனது ஆடைகளை கழற்றிவிட்டு அவனை நிர்வாணமாக மரத்தில் கட்டிச்செல்கிறார் தந்தை.

இவ்விபரம் தெரியவந்த தொண்டு நிறுவனத்தினர் அச்சிறுவனை மீட்டனர்.

இதேபோன்று கொல்யாரி கிராமத்தை சேர்ந்த சிறுவன் உமேஷ்(8).

இவனது தாய், தந்தையர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு 2012ல் இறந்தனர்.   உமேஷை அவன் பாட்டி பீபிபாய் வளர்த்து வருகிறார்.

பெற்றோர் இறப்புக்கு பின்னர் உமேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் இருக்கிறான். அவனுக்கு கண்களும் சரியாக தெரிவதில்லை.

எனவே, பகலில் மாட்டுக்கொட்டிலில் அவனை கட்டிவைத்து பராமரிக்கிறேன் என்று பீபிபாய் தெரிவித்தார்.

உமேஷையும் தொண்டுநிறுவனத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அழைத்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here