விமான ஏசியில் கோளாறு! ஹஜ் பயணிகள் நடுவானில் மயக்கம்!!

ஹஜ் பயணம் முடித்து திரும்பிய பயணிகள் விமானத்தில் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ்பயணிகள் குழு புனிதப்பயணம் முடித்து கராச்சி திரும்பிக்கொண்டிருந்தனர்.


கடந்த சனிக்கிழமை மதினாவில் இருந்து கராச்சி செல்லும் விமானத்தில் சுமார் 40ஹஜ்பயணிகள் சென்றனர்.
நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஏசி திடீரென்று நின்றது.
இதனால் விமானத்துக்குள் வெப்பம் ஏறியது. பெரும்பாலான பயணிகள் மயக்கம் அடைந்தனர்.


பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பயணிகள் விமானத்தில் ஏறியதும் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும் பணிப்பெண்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
நடுவானில் பயணிகளுக்கு ஏற்பட்ட தொல்லையை ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION