பேஸ்மெண்ட் வீக்! 3மாடி பில்டிங் விழுந்தது!! விடியோ!!

0
0

குண்டூர்: அஸ்திவாரம் பலமின்றி கட்டப்பட்ட 3மாடி கட்டிடம் ஒரே நிமிடத்தில் சரிந்து விழுந்தது.
இச்சம்பவம் நடந்துள்ளது குண்டூர் நகரில் உள்ள நந்திவேலுகு சாலையில்.


அங்குள்ள மணி செண்டர் என்ற 3மாடி கட்டிடம் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.
தற்போது அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக 4அடி ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு வருகிறது.
இதனால் பலம் இழந்த 3மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இக்கட்டிடம் சரிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கால்வாய் அமைக்க குழிதோண்டியபோது கட்டிடம் ஆடியதாகவும், அதில் இருந்த அனைவரும் முக்கிய உடைமைகளோடு பத்திரமாக வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here