மாணவி மீது குண்டர் சட்டம் ஏன்?

0
0

கல்லூரி மாணவி மீது குண்டர்சட்டம் போடப்பட்டது ஏன் ? என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

சேலம்  மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பாக பேரவையில் திமுக செயல்தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்தார் முதலமைச்சர் பழனிச்சாமி.

சம்பந்தப்பட்ட மாணவி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளன.

அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்.

எனவே, கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மத்திய அமைச்சர் மீது காலணி வீசியதாகவும் ஒரு வழக்கு உள்ளது.

மக்களிடையே கிளர்ச்சியை தூண்டி போராட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டார்.

மாணவர்கள் படிக்கும் காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது கூடாது. இதனால் படிப்பு கெடும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

கடந்த 13ம் தேதி சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி அரசு கல்லூரி அருகே கதிராமங்கலம் போராட்டம் தொடர்பாக துண்டுப்பிரசுரம் விநியோகித்து வந்தார்.

அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

மாணவி வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here