ஜிஎஸ்டி வரியில் திடீர் மாற்றம்!

0
2

நாடுமுழுவதும் ஒரே சந்தை, ஒரே வரி என்ற கொள்கை அடிப்படியில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வரி எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் மாதந்தோறும் கூடி ஆலோசிக்கிறது.

நான்கு வித வரிகளே ஜிஎஸ்டி திட்டத்தில் உள்ளன. பல பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வரி குறைப்பு, மாற்றம் போன்ற விஷயங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 21ஆவது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது.  நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு செஸ்வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நடுத்தர கார்கள் மீது 2%, ம். பெரிய கார்கள் 5% , சொகுசு  கார்கள்7% செஸ்வரி விதிக்கப்படுகிறது.

வணிகப்பெயரில் உணவுதயாரிக்கும் நிறுவனங்கள் மீது 5% வரிவிதிக்கப்படுகிறது. அவை தங்கள் வணிகப்பெயரை டிரேட்மார்க் சட்டத்தில் பதிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் இவ்வரி விதிக்கப்படும்.

வறுகடலை, இட்லி–தோசை மாவு, புண்ணாக்கு, மழைக்கோட்டு, ‘ரப்பர் பேண்டு, கேஸ்லைட்டர், துடப்பம், உலர்புளி, மசாலா சாமான், நெல்லில் இருந்து உமியை பிரித்தெடுக்கும் ரப்பர்ரோல், பூஜை சாமான்கள், கம்ப்யூட்டர் மானிட்டர் உள்பட பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் 30 பொருட்களுக்கு வரி குறைக்கப்படுகிறது.

 

பாதாம் பருப்பு மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

‘களிமண் பொம்மைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் கைவினைக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் போன்றோர் தங்களை ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

இதே அளவிலான தொகைக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சில்லரை வணிகங்களுக்கும் இதேபோன்ற பதிவு தேவை கிடையாது.

கதர் மற்றும் காதி தயாரிப்புகள் ஜிஎஸ்டி வரி விலக்கு பெற்றுள்ளன.

ஜூலை மாதத்துக்கான விற்பனை வரி கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 10–ந்தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிப்படிவம் தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து தீர்ப்பதற்காக 3பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.

ஆகிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here