ஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்!

0
1

டெல்லி: மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டமுடிவில் அருண்ஜெட்லி கூறியதாவது: தற்போதைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 49பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 29கைவினைப்பொருட்களுக்கு வரி விலக்கு முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வரிவிகிதம் இம்மாதம் 25ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.

வைரங்கள் நவரத்தினங்கள் மீதான வரி 3%ல் இருந்து 0.25%குறைப்பு. சிகரெட் பில்டர் மீதான வரி 12%ல் இருந்து 18% அதிகரிப்பு.
பயன்படுத்திய மோட்டார் வாகனங்கள் மீதான வரி 18% என குறைப்பு.
இயற்கை எரிபொருள் பயன்படுத்தும் பேருந்துகள் மீதான வரி 18%ஆக குறைப்பு..


ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு செஸ் வரியில் இருந்து முழுவிலக்கு. அதேபோல் தவிட்டின் மீதான வரியும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
வெல்வெட் துணிகள், மருதாணி பொட்டலம் மீதான வரி 5%ஆக குறைப்பு.
சர்க்கரைப்பாகில் தயாரான மிட்டாய்கள் மீது வரி 12%ஆக குறைப்பு.
20லிட்டர் குடிநீர் கேன்களுக்கான வரி 12%ஆக குறைப்பு
கேளிக்கை பூங்கா மீதான வரி 18%ஆக குறைப்பு.


தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் மீதான வரி 18%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சுரங்கம், கச்சா எண்ணெய், காசோலின், விமான எரிபொருளை எடுத்துச்செல்லும் போக்குவரத்து வாகன சேவைக்கான வரியும் குறைக்கப்படவுள்ளது.


ஜிஎஸ்டி திட்டம் அமலாக்கப்பட்டபின்னர் அரசின் மறைமுக வரி வருவாய் சுமார் 13ஆயிரம் கோடி குறைந்துள்ளது.
வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் விற்பனைக்கான பொருட்கள் மீது ஈ-வே பில் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.ரூ.50ஆயிரத்துக்கு அதிகமாக சரக்கு எடுத்துச்செல்வோர் இந்த பில்லை சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here