ஜிஎஸ்டி-ல் புதிய சலுகைகள்! பாஜக அரசின் முதல் பின்னடைவு!!

0
2

ஜிஎஸ்டி வரியில் சலுகைகள் காட்டப்பட்டுள்ளது. இது பாஜக அரசின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பணம் வாபஸ் திட்டம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது.

பாஜக தலைவர்களே பொருளாதார நிலை குறித்து விமர்சிக்க தொடங்கினர்.

இதனால் பொருளாதார நிலை குறித்து அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார் பிரதமர்.

இதற்கிடையே, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் சலுகை அறிவிப்புகள் விபரம்:

#ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில் இருந்து 6 மாதம் விலக்கு.
#ரூ. 1 கோடிக்கு கீழ் வணிகம் புரிபவர்கள்  ஜிஎஸ்டி கணக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம்.
# ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் தேவையில்லை.
#நவரத்தின கற்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது.
#ஏசி ரெஸ்டாரண்ட்களுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து, 12%-ஆக குறைப்பு.
#கேஸ் அடுப்புகளுக்கான ஜிஎஸ்டி 28%லிருந்து குறைக்கப்பட்டுள்ளது.
உச்சபட்ச ஜிஎஸ்டி வரி 28 சதவீத பட்டியலிலிருந்த பல பொருட்கள் விலக்கப்பட்டுள்ளன.
#வரும் ஏப்ரல் முதல் ஏற்றுமதியாளர்களுக்கும் இ வேலட் அறிமுகம் செய்யப்படும். #வணிக சின்னம் இல்லாத ஆயுர் வேத மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது.
#கைத்தறி நூல்களுக்கான ஜிஎஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
#ஆயுர் வேத மருந்துகளுக்கு ஜிஎஸ்.டி 12சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
#எழுது பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

#சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் ஜனவரி முதல் நாடுமுழுவதும் விரிவு படுத்தப்படும்.
இந்த அறிவிப்புகள் பாஜகவின் பொருளாதார பின்னடவை அடையாளம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த சலுகைகளால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு தூக்கி நிறுத்தப்படுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன.
3மாதங்கள் வரை சிறுதொழில் செய்வோர் ஜிஎஸ்டி தாக்கல் செய்வது தாமதமானால் அத்தொழில் சார்ந்தவர்களுக்கு ரிட்டர்ன் கிடைப்பதில் தாமதமாகும்.
இந்நடைமுறை மேலும்  சிக்கலைத்தான் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here