இயக்குநர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்

0
0

சிறையில் உள்ள இயக்குநர் கவுதமன் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் பூட்டுபோட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்குநர் கவுதமன் மற்றும் இளைஞர்கள் அதில் திரளாக பங்கேற்றனர்.

அவர்களை கைதுசெய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

15நாள் கடுங்காவல் தண்டனை பெற்றதைத்தொடர்ந்து அவர்கள் புழல்சிறையில் அடைக்கப்பட்டனர்.


சிறையில் அடைக்கப்பட்ட 13ம் தேதி முதல் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தி அவருடன் கைதான இளைஞர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

மூன்றாவது நாளான இன்றும் அவர்கள் உண்ணாவிரதம் தொடர்ந்தது.
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து கவுதமன் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here