கௌரி லங்கேஷ் கொலை…! நீதி கேட்டு பிரம்மாண்ட பேரணி…!

பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு நீதி கேட்டு பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.


பெங்களூருவில் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.
கவுரியின் கொலை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும், அதனை கண்டித்தும் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில்,பெங்களூருவில், கவுரி லங்கேஷ் கொலையை கண்டித்து இன்று கன்னட எழுத்தாளர்கள் சார்பில் பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது.

பேரணி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் துவங்கி சென்ட்ரல் கல்லூரி மைதானம் வரை நடைபெற்றது.

இந்த பேரணியில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரைப்படகலைஞர்கள் சுமார் 2௦ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION