ஒவ்வொரு தனிமனிதனும் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்..?

0
2

சட்டப்படி ஒவ்வொரு தனி மனிதரும் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று மத்திய அரசின் அறிக்கை என்ன சொல்கிறது.
பெண்கள் பலரும் பண்டிகை காலம் என்றால் நகைகள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

நாம் எந்த பயமும் இல்லாமல், வருமானவரி துறைக்கு பயப்படாமல் ஒவ்வொருவரும் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று மத்தியஅரசு 2௦16-ம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியிட்டது. அது அனைவருக்கு தெரியும். இருந்தாலும் இந்த விழா காலத்தில் நினைவு படுத்திக் கொள்வோம்.

ஆனாலும், எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று அரசு சொன்னால் மட்டும், அதன்படி கேட்டு அதே அளவு நகையை மட்டுமா வாங்கப்போகிறோம்.

இருந்தாலும் சட்டப்படி ஒருவருக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட நகைகள் வைத்திருக்கும் அளவுகள் எவ்வளவு என்று பாருங்கள் :

திருமணம் ஆன பெண்கள் 5௦௦ கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 25௦ கிராம், மற்றும் ஆண்கள் 1௦௦ கிராம் தங்க நகைகள் வைத்திருக்கலாம்.

நீங்கள் வைத்திருக்கும் நகைகளுக்கு தகுந்த ஆதாரம் வைத்திருக்க வேண்டும்.மேலும் எந்த வருமானத்தில் அவை வாங்கப்பட்டது என்பதையும் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் நகை பரிசாக வந்தது என்றால்,பரிசு கொடுத்தவர் பெயரில் ரசிது வைத்திருக்க வேண்டும்.


ஒருவர் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக வைத்திருக்கலாம். ஆனால் அது பாரம்பரிய குடும்ப நகையாக இருக்க வேண்டும்.


மேலும், அதிகமான குடும்ப நபர்கள் உள்ளவர்கள் தங்களது நகைகளை தனித்தனியாக வங்கி லாக்கரில் வைத்து கொள்வது நல்லது.வருமான வரி சோதனையில் அதிக சிக்கலை ஏற்படுத்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here