டிவி பார்ப்போரை கண்கலங்கவைத்த செய்தியாளர்!

0
1

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் டிவி சேனலில் குழந்தையுடன் செய்திவாசித்தார் பெண் பத்திரிகையாளர். இதற்கு காரணமான சம்பவம் தெரியவந்து செய்தியை பார்த்த அனைவரும் கண்கலங்கினர்.


பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8வயதுச் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பஞ்சாப் மாகாணத்தில் தினந்தோறும் 11 குழந்தைகள் இதுபோன்ற துன்பத்தை சந்தித்துவருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான செய்தியை வாசித்த சமா டிவி பத்திரிகையாளர் கிரண்நாஸ், தனது பெண் குழந்தையுடன் வாசித்தார். நான் ஒருதாயாக இச்செய்தியை வாசிக்கிறேன். மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை இந்நிகழ்ச்சி. இது அரசின் இயலாமையை உணர்த்துவதாக உள்ளது என ஆவேசமாக செய்தியில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here