ஏஞ்சலா மெர்கல் அதிபராக தொடர்கிறார்

0
0
ஜெர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் வெற்றிபெற்று அதிபர் பதவியில் 4வது முறையாக தொடர்கிறார்.
ஜெர்மன் பாராளுமன்ற தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிட்டன.
இதில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார்.
சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இதைவிட அதிக சதவீதம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
வலதுசாரி கட்சிக்கு வாக்களித்தவர்களின் கோரிக்கைகளையும் கவனிப்பேன் என்று கூறியுள்ளார்.
2005, 2009, 2013 என தொடர்ச்சியாக 3 முறை ஏஞ்சலாவின் கட்சி  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
ஏஞ்சலா மெர்கல் நிலையான ஆட்சியை நடத்துகிறார் என்ற நம்பிக்கையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் வலதுசாரி கட்சியான ஏஎப்டி வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here