ஜல்லிக்கட்டு விநாயகர் !!!

0
0

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 25 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது

இவை பல வடிவங்கள் மற்றும் பல நிறங்களில் 2 அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருமே போராடினர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சிறப்பை உணர்த்தும்வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குக் கோவையில் ஜல்லிக்கட்டு விநாயகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த விநாயகர் சிலை கோவைச் சிலைகள் வடிவமைப்பு கூடத்தில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


விநாயகர் காளையை அடக்குவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிகம்பேர் இச்சிலையை செய்துதரக்கோரியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here