விரக்தியில் தினகரன் எம்.எல்.ஏ.,க்கள்..! வீடு திரும்ப நச்சரிப்பு..!

0
7

புதுச்சேரி, ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏ.,க்கள் 10 நாட்களான நிலையில் பலர் விரக்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தா ஆதரவை வாபஸ் வாங்குவதாக கவர்னரிடம் கடிதம் அளித்தனர். முதல்வரை மாற்றவேண்டும் என்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றனர். எதிர் கட்சிகளும் அதற்கு ஆதரவு அளித்தனர்.

ஆனால், எதற்கும் கவர்னர் அசைந்து கொடுக்கவில்லை. கவர்னர் கைவிரித்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்  ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டனர். அதுவும் கிடைக்கவில்லை.

இதனால், புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள், விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை. தொகுதியிலும் எதிர்ப்பு கிளம்பிகிடக்கிறது. இதில் பலர் விரக்தி ஆகியுள்ளனர். இதனால்,
‘தொகுதிக்கு போகணும், என்னை விடு.. வீட்டிற்குப் போகணும், என்னை விடு’ என்று பதினாறு வயதினிலே கமல்ஹாசன் போல நச்சரித்து வருகிறார்களாம்.

நேற்று காலை திடீரென ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், சோளிங்கர் எம்.எல்.ஏ., பார்த்திபன் இருவரும் தனித்தனியாக காரில் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் இருவரும் விடுதியில் இருந்து, ‘எஸ்கேப்’ ஆகிவிட்டதாக செய்திகள் பரவியது.

மதியம், 12:30 மணிக்கு தங்க தமிழ்ச்செல்வன் வெளியே வந்தார். அப்போது, ”சுந்தர்ராஜ் தினகரனை சந்திக்க சென்னைக்கு சென்றுள்ளார். பார்த்திபன் பஞ்சவடி கோவிலுக்கு போயிருக்கார்,” என்றார்.

இதற்கிடையே, புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்று ஐதராபாத் செல்வதற்காக 26 டிக்கெட் இருக்கும் நாள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் விசாரிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் ஐதராபாத் சென்று, அங்கிருந்து டில்லி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Topics : Tamilnadu News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here