கணவரின் நண்பர்களால் பெண் பலாத்காரம்.

0
0

சிறையில் உள்ள கணவரை விடுவிக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் 36 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அவர் அந்தபகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தன்னை 2 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.


மேலும், அவர் தனது புகாரில் கூறியதாவது;
பெண்ணின் கணவர் சிறையில் உள்ளார். அவரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே கொண்டுவர அவரது நண்பர்கள் உதவி செய்வதாக வீட்டிற்கு வந்தனர்.


அவர்கள் இருவரும் என்னை பலாத்காரம் செய்து விட்டு இங்கு நடந்ததை போலீசில் கூறக்கூடது என்று மிரட்டி விட்டு சென்றனர். என்றுஅந்த பெண் புகாரில் கூறி உள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனின் நண்பர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here