ட்ரம்ப் மனைவிகளுக்கிடையே ‘ஃபர்ஸ்ட் லேடி’ போட்டா போட்டி..!

0
2

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்றாலே சர்ச்சை இல்லாமல் இருக்குமா? தற்போது மனைவிகளுக்குள் ஃபர்ஸ்ட் லேடி சண்டை வந்துள்ளது.

அதிபர் வெள்ளை மாளிகையில் வசிப்பதோ மூன்றாவது மனைவி மெலானியாவுடன். அவரது முதல் மனைவி இவானா, ‘ரைசிங் ட்ரம்ப்'(Raising Trump) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் அவரது மூன்று குழந்தைகள் பற்றியும் எழுதியுள்ளார்.


அந்த புத்தகத்தின் வெளியீடு விழாவில் இவானா பேசும்போது, ‘ எனக்கு வெள்ளை மாளிகையோடு தொடர்பு கொள்ள பிரத்யேக தொலைபேசி எண் உள்ளது. ஆனால். அங்கு இருக்கும் மெலானியாவுக்கு எந்த பொறாமை உணர்வும் வந்து விடக்கூடாது. ஏனெனில் நான் ட்ரம்ப்பின் முதல் மனைவி. அதாவது ஃபர்ஸ்ட் லேடி’ என்றார்.

பொதுவாகவே, அமெரிக்காவில் அதிபரின் மனைவியை ‘ஃபர்ஸ்ட் லேடி’ என்று அழைக்கப்படுவது வழக்கம். ஆகா எந்த மனைவியை ‘ஃபர்ஸ்ட் லேடி’ என்று அழைப்பது என்று இங்கு போட்டி ஏற்பட்டுவிட்டது.

உடனே மெலானியாவுக்கு வந்ததே கோபம். அவர் பதில் சொல்லாமல், அவரின் செய்தி தொடர்பாளர் மூலமாக பதில் கூறினார்.


மெலானியாவின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெஃபின் கிரிஷான், ‘திருமதி ட்ரம்ப்(மெலானியா), வெள்ளை மாளிகையை ட்ரம்ப் மற்றும் பர்ரனின்  (ட்ரம்ப்பின் இளைய மகன்) இல்லமாக மாற்றியிருக்கிறார். அவர் வாஷிங்டனில் வசிப்பதை நேசிக்கிறார்.

மேலும், அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடியாக இருப்பதில் பெருமைகொள்கிறார். அந்த அதிகாரம் மூலமாககுழந்தைகளுக்கு உதவுவது மட்டுமே அவரது எண்ணம். தவிர, புத்தகம் விற்பனை முயற்சி செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

அதாவது ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா, அதிபரின் பெயரை பயன்படுத்தி அவர் எழுதிய புத்தகத்தை விற்பனை செய்ய முயற்சிக்கிறார். அதற்காக ஃபர்ஸ்ட் லேடி என்று கூறிக்கொள்கிறார் என்பது மெலானியாவின் குற்றச்சாட்டு.

‘சபாஷ் சரியான போட்டி’ என்று அமெரிக்காவில் கலாய்க்கிறார்களாம்.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here