சென்னை சில்க்ஸ் தீ விபத்து: 11ஊழியர் தப்பினர், பலகோடி மதிப்பு ஆடைகள் சேதம்

0
0

சென்னை டி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ 5 மணி நேர போராட்டத்துக்குப்பின் அணைக்கப்பட்டுள்ளது.

சென்னை டி.நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

7 மாடிகள் உள்ள இக்கடை முழுக்க கண்ணாடி, பைபர் ஆகியவற்றால் ஆன உள் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

மேலும், 4, 5வது தளங்களில் வைக்கப்பட்டிருந்த ஏசி எந்திரங்களும் தீயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர், மற்றும் ரசாயன நுரையை வீசி தீயை அணைத்தனர்.

7வது மாடியில் தங்கியிருந்த கடை ஊழியர்கள் 11பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

கடையில் இருந்த பல கோடி மதிப்புள்ள ஆடைவகைகள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது.

மின்கசிவு காரணமாக இவ்விபத்து நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.


விபத்து நடந்த பகுதியில் உள்ள பிற கடைகள் மதியம் வரை திறக்க அனுமதிக்கப்படவில்லை.

உஸ்மான் ரோடு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here