விஷாலுக்கு எதிர்ப்பு! ஞானவேல்ராஜா ராஜினாமா!!

0
0

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார்.  இதனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிற்து.
இயக்குநர் சேரன் உள்ளிட்ட சிலர் தயாரிப்பாளர்சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்துவரும் போராட்டத்துக்கு சரத்குமார், ராதிகா மற்றும் திரையுலக பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து விஷால் கூறுகையில்,
தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை.
கீழ்த்தரமான விமர்சனம் மூலம் மிரட்டி காரியம் சாதிக்க விளம்பரம் தேட சேரன் முயற்சி செய்கிறார். தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர் சங்கத்தை அரசு பழிவாங்கும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. அது ஜனநாயகத்துக்கு முரணானது என்று விஷால் கூறியுள்ளார்.

இப்பிரச்சனை தொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு உறுதுணையாக இருந்துவரும் செயலாளர் ஞானவேல்ராஜா பதவி விலகி உள்ளார்.
விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் அவர் போட்டியிடுவதால் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here