குழந்தையை விற்று செல்போன் வாங்கிய குடிகார தகப்பன்…!

0
0

11 மாத கைக்குழந்தை விற்று போன் வாங்கிய தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிஸா மாநிலம் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்த பலராம் முகி. அவரது மனைவி சுகுதி. இவர்களுக்கு 1௦ வயதில் ஒரு மகனும், 7வயதில் ஒரு மகளும், 11 மாத கை குழந்தையும் உள்ளனர். பலராம் நிரந்தர வேலை இல்லாத குடிப்பழக்கம் உள்ளவர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சோம்நாத் சேத்தி எனபவரின் ஒரே மகன் இறந்து விட்டார்.
சோம்நாத் சேத்தியின் மனைவி தன் மகன் இறந்த துக்கத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் சோம்நாத் சேத்தி இருந்துள்ளார்.

இந்நிலையில் சோம்நாத் சேத்தி, பலராமின் குடிப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரது 11 மாத குழந்தையை தத்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

பலராம் தனது குழந்தையை தத்துக் கொடுக்க பணம் கேட்டுள்ளார். சோம்நாத் சேத்தி அந்த குழந்தைக்கு ரூ.23 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

பலராம் முகி அந்த பணத்தைக் கொண்டு 2ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செல்போனும் தனது மகளுக்கு ஆயிரத்து 5௦௦ ரூபாய்க்கு கொலுசு ஒன்றும் வங்கி உள்ளார். மீதி பணத்தைக் கொண்டு எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடித்துவிட்டு மட்டையாகி விட்டார்.

இந்த சம்பவம் பலராம் மனைவிக்கு தெரியவந்தது. அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பலராமை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here