லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி..! தீக்குளித்த விவசாயிகள்..!

0
2

அரசு திட்டத்தின்படி தங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலத்தை ஒதுக்கித் தரும்படி கேட்ட விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை எதிர்த்து விவசாயிகள் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு ஆட்சி செய்து வருகிறது.அங்கு கரீம் நகரைச் சேர்ந்த, ஸ்ரீநிவாஸ்(25) மற்றும்  பரசுராமுலு(23) என்ற இரண்டு விவசாயிகள் அரசு திட்டத்தின்படி, ஏழை விவசாயிகளுக்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி உள்ளூர் வருவாய்த் துறை அதிகாரியிடம் கேட்டனர்.

 

அந்த அதிகாரி, நிலத்தை ஒதுக்கித்தர இருவரிடமும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.அதிகாரி லஞ்சம் கேட்டது குறித்து கிராம மக்களுடன் பேசிய அவர்கள், கிராமத்து மக்களை திரட்டிக்கொண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த, உள்ளூர், எம்.எல்.ஏ., விடம் முறையிட சென்றனர்.

 

 

ஆனால், எம்.எல்.ஏ.,வின் அலுவலகத்தில் நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தும், அவர்களை சந்திக்க எம்.எல்.ஏ., மறுத்து விட்டார்.இதனால், ஆத்திரம் அடைந்த, இரு விவசாயிகளும் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.


இதில் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே லஞ்சம் கேட்ட வருவாய்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில், விவசாயிகளை சந்திக்காத எம்.எல்.ஏ.,வின் உருவ பொம்மையை எரித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

 

ஏழைகளுக்கு அரசு செய்ய நினைக்கும் நல்ல திட்டங்களை அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அரசு மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறார்கள் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here