உழவு மாடானார் உ.பி. விவசாயி

0
0

மண்ணின் மனிதர்களான விவசாயிகளின் வாழ்க்கை நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது.
நிதிச்சுமையால் சிக்கித்தவிக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை.
விவசாயக்கடன் தள்ளுபடி என்பது பேஷன் என்று மத்திய அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உழவுமாடாக தன்னையே பூட்டி உழுதுவருகிறார் விவசாயி ஒருவர்.

அம்மாநிலத்தின் பிஜ்னோர் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராம்.
2ஏக்கர் விவசாய நிலத்தின் உரிமையாளர்.
விபத்து ஒன்றில் மணிக்கட்டை இழந்த இவர் நம்பிக்கை, தனது தோளை நம்பி விவசாயத்தை தொடர்ந்து வருகிறார்.

2ஆண்டுக்குமுன் கரும்பு கருகிவிட்டது. நெல் விதைத்தால் விலங்குகள் தொல்லை.
வாழ்வாதாரம் ஏதுமின்றி உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இவரது சொந்த வீடு இடிந்து வசிக்க முடியாததாக உள்ளது.                                              மகன் சம்பளமோ மாதம் ரூ.5ஆயிரம்.

அதனை வைத்து நாட்களை ஓட்டிவருகிறார். இவருக்கு அரசு உதவிகள் கிடைப்பதற்காக ஆதார் அட்டை எடுக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here