பயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை!

0
2

உத்தரப்பிரதேசம்: பயிர்க்கடன் திருப்பிச்செலுத்தாத விவசாயியை வங்கி ஏஜெண்டுகள் கொடூரமாக கொன்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த விவசாயி கியான் சந்திரா(45).இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். 2.5ஏக்கர் விளைநிலம் உள்ளது.
பயிர்க்கடனாக தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.5லட்சம் கடன்பெற்றார்.
ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டியது இருந்தது. ரூ. 35 ஆயிரம் பணத்தை சில வாரங்களுக்கு முன்புதான் செலுத்தி இருந்தார்.

மீதத் தொகையை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டு இருந்தார்.
இந்நிலையில், அவர் வீட்டுக்கு கடன் வசூலிக்கவந்த நபர்கள் டிராக்டரை கொண்டுசெல்ல முயன்றனர்.

அதை கியான்சந்திரா தடுத்தபோது அவர் மீது டிராக்டரால் மோதினர். சம்பவ இடத்திலேயே கியான்சந்திரா இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here