விபத்தில் ரசிகர் பலி! கதறியழுது அஞ்சலி செலுத்திய நடிகர்!!

0
0

சென்னை: திருமணமான 3மாதத்தில் இறந்த ரசிகர் உடலைப்பார்த்து கதறி அழுதார் நடிகர் கார்த்தி.   திருவண்ணாமலை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றத்தின் செயலாளராக இருந்து வந்தவர் ஜீவன்குமார்(27). அவர் கார் விபத்தில் காலமானார்.

ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது.


பலத்த காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜீவன் குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.
ஜீவன் குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மரணம் அடைந்த ஜீவன் குமாரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுதார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here