உடனடி விடியோ சேவை! பேஸ்புக்கில் விரைவில் அறிமுகம்!!

உடனடி விடியோ என்ற புதிய சேவையை துவக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
பேஸ்புக் நிறுவனம் சமூக ஊடகமாக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது.


எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள் என்ற உடனடி செய்தி சேவையை நடத்திவருகிறது.
இந்தியாவில் இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களையும் தாண்டி மீடியா நிறுவனங்களையும் கவர்ந்திழுத்துள்ளது.

இதேபோன்று இன்ஸ்டண்ட் விடியோ என்ற உடனடி விடியோ சேவையை பேஸ்புக் துவக்கவுள்ளது.
இந்த சேவையில் மொபைல், ஹேண்டிகேம், விடியோகேம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட செய்தி, பொழுதுபோக்கு சார்ந்த விடியோக்களை பேஸ்புக்கில் பதிவிடலாம்.


விடியோக்களின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டு அவை பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும். அந்த விடியோக்களை விரும்ப, டவுன்லோடு செய்ய முடியும்.
பேஸ்புக் வாட்ச் என்ற சேவையை அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.


இதுவும் ஒரு விடியோசார்ந்த சேவை இதில் வெளியாகும் விடியோக்களில் விளம்பரங்களை சேர்த்து வெளியிடுகிறது பேஸ்புக். அதில் கிடைக்கும் லாபத்தில் 55% விடியோவின் உரிமையாளருக்கு தருகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION