தமிழ்நாட்டில் தவித்த ரஷ்யருக்கு உதவி! சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டு!!

ரஷ்ய பயணி இவாஞ்சலின் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் ஏடிஎம் லாக் ஆகிவிட்டது. எனவே பணம் எடுக்க முடியாமல் திணறினார்.

காஞ்சிபுரம் கோவில் வாசலில் அவர் பிச்சை எடுத்துவந்தார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.  காஞ்சிபுரம் போலீசார் இவாஞ்சலினை அழைத்து விசாரித்தனர்.

அவருக்கு ரூ.500 செலவுக்கு கொடுத்தும்,  ரயில் டிக்கெட் வாங்கித்தந்தும் சென்னை அனுப்பிவைத்தனர்.

சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தை அணுகி உதவிபெறுமாறு கூறினர்.

இவ்விபரம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு தெரியவந்தது.

இவாஞ்சலின் சென்னையில் உள்ள  அதிகாரிகள் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வார்கள். இந்தியாவும், ரஷ்யாவும் நீண்டநாள் நண்பர்கள் என்று டுவிட் செய்திருந்தார் சுஷ்மா.

அமைச்சரின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து சுஷ்மாவை பாராட்டியுள்ளனர்.

இதற்கிடையே சென்னை வந்த இவாஞ்சலின் ரஷ்ய தூதரகம் சென்றதாக தகவல் இல்லை. அதேநேரம், அவர் இப்படியே ஊர்சுற்றி பார்த்து விசாக்காலம் முடிந்ததும் திரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION