எக்ஸ்பிரஸ் சதம்! மில்லர் சாதனையை சமன் செய்தார் ரோகித்சர்மா!

0
3

இந்தூர்: அதிவேகமாக சதமடித்து தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா.
தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் வங்கதேசத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தே இதுவரை டி20 போட்டிகளில் அதிகவேகமான சதமாக இருந்தது.

தனது இன்றைய சதத்தின் மூலம் இந்த சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோகித், 10 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் ரோகித் இன்று படைத்துள்ளார்.
23பந்துகளில் 7முறை 4ரன்களும், மூன்று சிக்சரும் அடித்து 50ரன்களை தொட்டார்.
35பந்துகளில் 11முறை 4ரன்கள், 8 சிக்சர் என்று அசத்தி 100ரன்கள் குவித்தார்.
43பந்துகளில் 12முறை 4ரன்கள், 10சிக்சர் என்று விளாசி 118 ரன்களை எடுத்தார்.


முன்னதாக, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இன்றைய போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் 89 ரன்கள் எடுத்தார். 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களுடன் இந்தியா தொடர்ந்து விளையாடியது.  சதம் நோக்கி விளையாடிய லோகேஷ் 89 ரன்களில் அவுட் ஆனார்.


ஹர்திக் பாண்டியா 10 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமலும் டோனி 28 ரன்களிலும் அவுட் ஆயினர்.
இறுதியாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 261 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here