வருவார் எவருமில்லை..! ஏமாற்றமுடன் சிறை திரும்பும் சசிகலா..!

0
2

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர்  நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்திருந்தார்.


சென்னை, தி.நகரில் அவரது உறவினர் கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளது. அங்கு தங்கி இருந்த சசிகலா தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார்.

பரோலில் வந்துள்ளதை அறிந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை சந்திக்க குவிந்து விடுவார்கள் என்று சசிகலா நினைத்திருந்தார்.

ஆனால், அவர் எதிர் பார்த்தது போல யாரும் அவரை சென்று பார்க்கவில்லை. இதில் சசிகலா மிகவும் மனமுடைந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்றுடன் அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிகிறது. இன்று மாலை 6 மணிக்குள் அவர் சிறைக்குள் செல்ல வேண்டும்.


எனவே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க., பொது செயலாளர் சசிகலாவை வழி  அனுப்புவதற்கு திரளாக கட்சியினர் வர வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here