தேர்தல் எந்திரம்: பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு

0
0

தேர்தல் எந்திரம் தொடர்பாக பாஜகவின் கருத்துக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அவர் அளித்த பேட்டியின்போது

தேர்தல்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் சரியாகத்தான் உள்ளது என்றார்.

பல்வேறு அரசியல்கட்சிகள் தேர்தல் எந்திரங்கள் மீது சந்தேகம் தெரிவித்தன.

அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகள் கூட்டம் கூட்டி விளக்கம் அளித்தது.

தற்போது, வாக்கு எந்திரங்களை திருத்த வாருங்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை தேமுதிக ஏற்றுக்கொண்டுள்ளது.

3 ஆண்டுகளில் கருப்புப்பணத்தை ஒழிப்பதாக மோடி சொன்னார்.

நடவடிக்கை எடுத்துவருகிறார்.

ஆனால், என்னிடம் கருப்புப்பணம் இல்லை. எனவே எந்த ஒரு கவலையும் இல்லை. சோதனையும் இல்லை.

ஊழல் செய்தவர்கள், கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுகின்றனர்.

கார்த்திக்சிதம்பரம், விஜய்மல்லையா வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அரசியல் என்றால் எதிர்ப்பு இருக்கும். எனக்கு இல்லையா? ரஜினி எனது நல்ல நண்பர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைப்பு பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.

கல்விக்கண் திறந்த காமராஜரின் ஊர் விருதுநகர். எனவே, அம்மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.

கருணாநிதியின் மாவட்டமான திருவாரூர் எத்தனாவது இடமென்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here