இணைய வர்த்தகத்தில் கோடிகோடியாய் குவிக்கும் வாலிபர்!

0
2

வாரணாசி:இணையவழி வர்த்தகத்தில் கோடிகளை குவித்து வருகிறார் வாரணாசியை சேர்ந்த வாலிபர்.
கிருஷ்ணகுமார்(35)பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலை தேடினார். அவருக்கு எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை கிடைத்தது.
உதவியாளராக வேலைக்கு சேர்ந்தவர் தன்னுடைய ஆர்வத்தால் வீட்டு உபயோக மின்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுதுநீக்க கற்றுக்கொண்டார்.

பின்னர் படிப்படியாக முன்னேறி எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை டெல்லிக்கு சென்று வாங்கிவந்து விற்க தொடங்கினார்.
அப்போது இன்வர்டர், பாட்டரி ஆகியவை சந்தைக்கு அறிமுகமாகி இருந்தன. அதன் தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்ட கிருஷ்ணகுமார் விற்பனையில் உத்தரப்பிரதேசம் முழுவதும் விற்பனை செய்ய தீவிரம் காட்டினார்.

அதன்பின்னர் கம்ப்யூட்டர் விற்பனையில் உள்ள வாய்ப்புக்களை தெரிந்துகொண்ட அவர் ஈஷாப் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இணையம் வழியாக கிருஷ்ணா கம்ப்யூட்டர் என்றபெயரில் கம்ப்யூட்டர் விற்பனை செய்துவருகிறார்.

இவரது வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்தது. துபாய் நகரில் விற்கும் குறைவான விலைக்கு நிகராக தனது நிறுவனத்திலும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்றுவருகிறார் கிருஷ்ணகுமார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழிலதிபர் வட்டாரத்தில் கேகே என்று அழைக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here