எமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு!

0
1

துபாய்:எமிரேட்ஸ் விமான நிறுவனம் பயணக்கட்டணத்தை வெகுவாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மற்றும் தங்கள் விடுமுறையை திட்டமிடுவோருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சொகுசு விமான சேவையில் முன்னணி வகிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் பிசினஸ், எகானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான துவக்க கட்டணம் 825தினார் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் சென்னை, கொச்சி, மங்களூர் நகரங்களுக்கும் இக்குறைந்த பட்ச துவக்க கட்டணத்தில் பறந்து சென்று வரலாம்.


பிலிப்பைன்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் உள்ள பிரபல ஊர்களுக்கும் இச்சலுகை கட்டணம் பொருந்தும்.
நியூயார்க் நகருக்கு 3,532 தினார் கட்டணமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜூரிச், ஏதென்ஸ், பிராங்க்ஸ்பர்ட் நகரங்களும் கட்டணச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இப்பயணக்கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here