20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

0
1

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.


அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தார் கேஜரிவால்.
இதனால் ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகளை அவர்கள் வகிக்கின்றனர். அவர்கள் பதவியை பறிக்கவேண்டுமென்று காங்கிரஸ், பாஜக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.
இதற்கிடையே, சட்டப்பேரவை செயலாளர்கள் பதவி ஆதாயம்தரும் பதவியில் வராது என்று அவசரச்சட்டம் இயற்றியது டெல்லி சட்டசபை.


இச்சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் வழங்கவில்லை.
கடந்த ஓராண்டாக இப்பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரித்தது.
21 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஜர்னைல்சிங்   ராஜினாமா செய்துவிட்டார். அதனால் 20எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


அரசியல் சாசன சட்டம் 191ல் எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம்தரும் வகையில் இரட்டைப்பதவி வகித்தால் அவர்கள் பதவியிழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல் சாசனசட்டம் 103(2)ன் கீழ் எம்.எல்.ஏக்கள் பதவியை பறிக்க பரிந்துரை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இருப்பினும் ஆம் ஆத்மி ஆட்சிகவிழும் வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here