ஓ.பி.எஸ் கனவை நொறுக்கினார் எடப்பாடி!

0
0

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஐவர் அணியில் ஒருவர். அவ்வளவுதான். ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் முதல்வர் ஆன ஓ.பன்னீர்செல்வம், தர்மம் வெல்லும் என்று சசிகலாவை எதிர்த்து வெளியேறினார்.

சசிகலா முதல்வர் கனவில் இருந்தார். மத்திய அரசு அதற்கு ஆப்பு வைத்து சிறைக்குள் தள்ளியது. இந்த இடைவேளையில் எடப்பாடி பேசப்பட்டார். அதிகாரம் அவர் கைக்கு வந்தது.

அதிகாரத்தை ருசித்து ரசித்து பார்த்தவர் அதை விட்டுவிட்டு வெளியேறிவிட அவர் என்ன பிஸ்கட் சாப்பிடும் குழந்தையா? முதல்வர்ஆன, பின்னர் அவர் தனது செயல்பாடுகளை திட்டமிட்டு நகர்த்தி செல்கிறார். நேற்று நடந்த பொதுக் குழுவில் ஒ.பி.எஸ்-க்கே ஆப்பு வைத்தார்.

ஒ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க., வின் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பது கனவாக இருந்தது. பொதுச் செயலாளர் தேர்தல் வைத்தாலும் பன்னீர்செல்வம் ஜெயித்துவிடலாம் என்று நினைத்து இருந்தார். கட்சியை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி, முதல்வர் என்கிற தன்னை மீறிய ஒரு அதிகாரம் யாருக்கும் போய்விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதற்கு ஏற்றவாறு காய் நகர்த்தி, பொதுச் செயலாளர் பதவியையே இல்லாமல் செய்தார்.

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று தீர்மானம் போட்டு பன்னீரின் கனவுகளை புதை குழிக்குள் தள்ளினார்.

ஒருங்கிணைப்பு குழுவே கட்சியை வழிநடத்தும் என்றும் ராஜதந்திரமாக தனக்கு சாதகமான சூழலைஅமைத்துக்கொண்டு பன்னீர்செல்வத்தையே ஏமாற்றி விட்டார்.

Related Topics : Tamilnadu news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here