போலீசை ஏவி எடப்பாடி மிரட்டுகிறார்!

0
0

போலீசை ஏவிவிட்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை எடப்பாடி மிரட்டுகிறார் என்று  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19பேர் கர்நாடகமாநிலத்தில் உள்ள ரிசார்டில் உள்ளனர்.

சோம்வார்பேட்டை தனியார் ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று தமிழக போலீசார் 30க்கும் மேற்பட்டவர்கள் ரிசார்ட்டுக்கு வந்தனர்.

அவர்கள் எம்.எல்.ஏ.க்களை மிரட்டியுள்ளனர். நீங்கள் எங்களுடன் வாருங்கள் என்று வலுக்கட்டாயமாக எம்.எல்.ஏ.க்களை அழைத்துள்ளனர்.

சில எம்.எல்.ஏக்களிடம் மிரட்டும் தொணியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதுகுறித்து குடகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழக முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாததால் அவரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தோம். ஆளுநரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால்  எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் இங்கு 18எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளோம்.

இங்கு தங்கியுள்ள எங்களிடம் தமிழக போலீசார்   எங்கள் அறையை சோதனையிடுகிறோம் என்று மிரட்டுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருங்கள். அவரிடம் பேசுங்கள் என்று வலியுறுத்துகின்றனர்.

MDK MLA NEW

பொய்வழக்குப்போட்டு கைதுசெய்வோம் என்று மிரட்டும் வகையில் பேசுகின்றனர்.

 

நாங்கள் தினகரனின் வழிகாட்டுதலின்படியே நடப்போம் என்று தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here